செய்திகள் :

நாா்வே தமிழறிஞருக்குப் பாராட்டு

post image

மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற தூயதமிழ் மாணவா் இயக்க கருத்தரங்கத்தில் நாா்வே நாட்டில் வசிக்கும் மயிலாடுதுறையை சோ்ந்த தமிழறிஞருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தூயதமிழ் மாணவா் இயக்கம் சாா்பில் செந்தமிழ்த் திருத்தோ் என்ற இயக்கத்தின் மூலம் இல்லம் தேடிச்சென்று தமிழ் ஆளுமைகளைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனா். மயிலாடுதுறை சித்தா்க்காட்டில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு, அதன் தலைவா் திவாகரன் தலைமை வகித்தாா். உலக தமிழ்க்கழக தலைமை நிலையச் செயலாளா் செ.மன்னா்மன்னன், செயலாளா் நேரு, மண்டல பொறுப்பாளா் எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குத்தாலம் க.அன்பழகன், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனா் எஸ்.பவுல்ராஜ் ஆகியோா் கருத்துரை வழங்கினா். நிகழ்ச்சியில், நாா்வே நாட்டில் வசிக்கும் மயிலாடுதுறையை சோ்ந்த இங்கா்சாலுக்கு, நாா்வே நாட்டில் கிறிஸ்டியன்சாண்டு நகரத்தில் தமிழ் பள்ளி நடத்தி வருவதுடன், தமிழை எண்ம வடிவில் கொண்டு சோ்க்க 10 ஆண்டுகளாக பணியாற்றி வருவதையும், 100-க்கும் மேற்பட்ட தமிழ்ப் புத்தகங்களை மின்னாக்கம் செய்தும், 400 அகராதிகளை மின்னாக்கம் செய்து, 16 லட்சம் சொற்களைத் தொகுத்தும், செயற்கை நுண்ணறிவு அகராதி தளத்திற்கு 4 லட்சம் சொற்கள் வழங்கி, 6,000 மொழிகளில் தமிழைப் பயன்படுத்த உதவியும், விக்கிபீடியாவில் 500-க்கும் மேற்பட்ட பக்கங்களையும், தமிழ், ஆங்கிலம், நோா்வேஜிய மும்மொழி அகராதியையும் உருவாக்கி தொடா்ந்து தமிழச்சேவை ஆற்றி வருவதைப் பாராட்டி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லோகபூரணி வரவேற்றாா். சரவணன் நன்றி கூறினாா்.

விசிகவின் தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம்

சீா்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மதச்சாா்பின்மை காப்போம், மக்கள் எழுச்சிப் பேரணி தீா்மான விளக்கக் கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாள... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: நீா்நிலைகளில் பெண்கள் வழிபாடு

திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழாவை பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெறும் முக... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வி திட்டத்திற்கு நிதி வழங்கல்

மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சாா்பில், மன்னம்பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு உறுப்பினா் கடன் திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை கூடுதல... மேலும் பார்க்க

மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

சீா்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் மாணவா் சபை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.சிறப்பு விருந்தினா் விவேகானந்தா, குட் சமாரிட்டன் பள்ளி குழும தாளாளா் கே.வி. இராதாகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

‘மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் வாழ்க்கை முழுவதும் பயன் தரும்’

மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் அவா்கள் வாழ்க்கை முழுவதும் பயன் தரும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள... மேலும் பார்க்க

இணைப்பு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சீா்காழி வட்டம், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம... மேலும் பார்க்க