RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?
நிதி ஆயோக் கூட்டத்தில் மமதா பங்கேற்பாரா?
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மே 24ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொள்வாரா இல்லையா என்பது குறித்து சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் நேரில் கலந்துகொள்வாரா அல்லது தனது சார்பாக யாரேனும் அனுப்புவாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த விஷயத்தில் தனது முடிவை அவர் சரியான நேரத்தில் அனைவருக்கும் தெரிவிப்பார் என மாநில மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற நிதி ஆயோக்கின் கடைசி கூட்டத்தில் மமதா பானர்ஜி தனது உரையின்போது மைக் அணைக்கப்பட்டதாகவும், அதனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசமுடியாமல் போனதாகவும் குற்றம் சாட்டி கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்ததால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இந்த விஷயத்தில் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தனக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகவும், தனக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டதாகவும், அதேநேரத்தில் தனக்கு முன் பேசிய பிரதிநிதிகளுக்கு 10 முதல் 20 நிமிடங்கள் வரை உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு பக்கத்தில் அவரது குற்றச்சாட்டுகளை மத்திய அரசு நிராகரித்தது. அதேசமம் பிஐபியின் அறிக்கையில், அந்தக் கூட்டத்தில் மமதா பானர்ஜியின் பேச்சு நேரம் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.