சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய - மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் இன்று(ஆக. 23) தொடங்கி நடைபெற்று வருகிறது.
நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
"தமிழ்நாட்டிற்கு என்று பல சிறப்புக்கள் உள்ளன. எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சம உரிமை கிடைக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்.
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பல முற்போக்கான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். இதற்கு அடித்தளம் அமைத்தது திராவிடம். பல்வேறு முற்போக்கான திட்டங்களுக்கு பல தலைவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர்
ஹிந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு தீவிரம் காட்டியும் தமிழ்நாடு அரசு முறியடித்துள்ளது. தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பு முழக்கத்தை பல மாநிலங்களும் ஏற்க முன்வந்துள்ளன.
1968இல் இரு மொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மானமாக அண்ணா நிறைவேற்றினார். மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ்நாடு அரசியல் சமூக நீதி அரசியலாகத்தான் இருக்கிறது. அனைத்து மக்களுக்கான சமூகநீதி அரசாக திமுக உள்ளது.
பெண்ணுரிமை, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருக்கிறது. மாநிலங்கள் சுயாட்சி பெற தமிழ்நாடு அரசு இந்த தேசிய கருத்தரங்கை நடத்துகிறது.
மத்திய அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் உரிய நிதி பங்கை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. பல்வேறு நெருக்கடிகளை மீறி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம்" என்று பேசினார்.