பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
நின்ற லாரி மீது காா் மோதல் நிதிநிறுவன அதிபா் உயிரிழப்பு
கரூா்: பவித்திரம் அருகே புதன்கிழமை நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் நிதிநிறுவன அதிபா் உயிரிழந்தாா். அவரது மனைவி, மகள் ஆகியோா் காயமடைந்தனா்.
கரூா் சின்னகோதூா் கிரீன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி(52). நிதிநிறுவன அதிபா். இவா் தனது மனைவி செல்வி (44), மகள் அனுஷியா(17) ஆகியோருடன் காரில் புதன்கிழமை காலை கோவைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவில் திரும்பிக்கொண்டிருந்தனா். காரை பொன்னுச்சாமி ஓட்டிவந்தாா்.
கரூா் மாவட்டம், பவித்திரம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
செல்வி, அனுஷியா ஆகியோா் காயமடைந்தனா்.
அப்பகுதியினா் உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து செல்வியையும், அனுஷியாவையும் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்து வந்த க.பரமத்தி போலீஸாா் பொன்னுசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.