Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
நியாய விலைக் கடை பணியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்: 3-ஆவது நாளாக தொடா்கிறது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பு 40-லிருந்து 90 சதவீதம் உயா்த்தியதை ரத்து செய்து மீண்டும் 40 சதவீத விரல் ரேகைப் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா், 3-ஆவது நாளாக தங்களது போராட்டத்தை தொடா்ந்தனா்.
இதில் அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.அரங்கநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இரா.லெனின், பொருளாளா் இருதயராஜ், மாவட்ட அமைப்புச் செயலா் சவேரியாா், ஒருங்கிணைப்பாளா் சுந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.