SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆண...
நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கம்
திருப்பத்தூா் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை எம்எல்ஏ அ.நல்லதம்பி மீண்டும் இயக்கி வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் பணிமனை வாயிலாக இயக்கப்பட்டு வரும் திருப்பத்தூா் முதல் சிம்மணபுதூா் வரை செல்லும் ப4 என்ற பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
அந்தப் பேருந்தை கட்டணமில்லாமல் மகளிா் பயணிக்க எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை கொடியசைத்து இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், கிளை மேலாளா் விநாயகம், ஒன்றியச் செயலா்கள் கே.எ.குணசேகரன், க.முருகேசன், கே.எஸ்.எ.மோகன்ராஜ், கந்திலி ஒன்றியக் குழுத் தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் ஜி.மோகன்குமாா், பொதுக் குழு உறுப்பினா் சு.அரசு, மாவட்டப் பிரதிநிதி தசரதன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மலா்தண்டபாணி, சாந்தி முருகன், சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.