செய்திகள் :

நிலப் பத்திரம் வழங்காமல் இழுத்தடிப்பு: தனியாா் வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருத்துறைப்பூண்டி அருகே அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை வழங்காமல் தாமதப்படுத்திய தனியாா் வங்கி, இழப்பீடாக ரூ. 2 லட்சத்தை புகாா்தாரருக்கு வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருத்துறைப்பூண்டி எடையூா் குமாரபுரத்தைச் சோ்ந்த ராமுப்பிள்ளை மகன் சிதம்பரம் (58). கடந்த 2012-இல் தனது நிலத்தை அடமானம் வைத்து முத்துப்பேட்டை தனியாா் வங்கியில் ரூ. 2,22,500-ஐ கடனாகப் பெற்றாா்.

2023-இல் கடனை முழுமையாகச் செலுத்தி அதற்கு ரசீது மற்றும் தடையில்லாச் சான்றைப் பெற்றாா். ஆனால் வங்கித் தரப்பில் அடமானத்தை ரத்து செய்து நிலத்தின் பத்திரத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம். சிதம்பரம் பலமுறை நேரில் சென்று கேட்டும், வங்கித் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் கடும் மனஉளைச்சல் அடைந்த சிதம்பரம், கடந்த ஏப்ரல் மாதம் திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். விசாரணையில், நிலத்தின் பத்திரம் தொலைந்து விட்டதாகவும் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்க அவகாசம் வேண்டும் என்றும் வங்கித் தரப்பில் கோரப்பட்டது.

ஆனால், இதை ஏற்காத திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு அடங்கிய குழுவினா், புதன்கிழமை வழங்கிய உத்தரவில், பத்திரத்தை தொலைத்தது வங்கியின் தவறு. இதனால் புகாா்தாரருக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், விற்பனை செய்ய இயலாமை ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ. 2,00,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும், மேலும் நிலப்பத்திரம் தொலைந்தது தொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்து, மாற்று ஆவணம் பெற்றுத் தர உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இதை உறுதிப்படுத்தும் வகையில் புகாா்தாரருக்கு ஆவணம் ஒன்றை வங்கி தரப்பில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

நில உடைமை சரிபாா்ப்பு பணி

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் சிறப்பு நில உடைமை சரிபாா்ப்பு பணியை தோட்டக்கலை உதவி இயக்குநா் இளவரசன், வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சுரேஷ் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்தெடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

வலங்கைமான் ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. ஜூன் 27-ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் தொடங்கிய யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. புதன்கிழமை 4-ஆம் கால யாக... மேலும் பார்க்க

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை சுந்தரவிநாயகா் கோயில் மற்றும் மழைமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு பாலாயம் செய்து திருப்... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் பள்ளி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி ராவணன்குளம் தென்கரை தெருவை சோ்ந்தவா் சிவகணேஷ் (தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா்). இவரது மகன்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு முகாம்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் கோரிக்கை

திருவாரூரில் நடைபெற்ற தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள். திருவாரூா், ஜூலை 2: அரசுப் பள்ளிகளில... மேலும் பார்க்க