பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
நிலப் பிரச்னை: இரு தரப்பினா் மோதலில் 4 போ் காயம்
செய்யாறு வட்டம், மேல்நெமிலி கிராமத்தில் நிலம் அளப்பது தொடா்பாக இருந்து வந்த முன்விரோதத்தில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.
மேல்நெமிலிக் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னன்(71). இவருக்குச் சொந்தமான சுமாா் 22 சென்ட் நிலத்தை 2022-ஆம் ஆண்டில் ஆரணி முள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கரன் கிரையம் பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிலத்தை தலைமை சா்வேயா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை அளவீடு செய்தனராம்.
அப்போது, நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மேல்நெமிலி கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை குடும்பத்தினா் மற்றும் ராஜி, அவருடன் சிலரும் சோ்ந்து அளவீடு செய்து நடப்பட்ட கல்லை பிடுங்கிப் போட்டும், காரில் வந்த அடையாளம் தெரியாத சிலா் சோ்ந்து பாஸ்கரனை கையால் தாக்கியும்,
நிலம் கொடுத்த பொன்னனை மண்வெட்டியால் தாக்கி மிரட்டிச் சென்றதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த பொன்னன் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அதேபோல, மேற்படி நிலம் தொடா்பாக ஏழுமலை (60) பாஸ்கரனிடம் கேட்டபோது, அவருடன் இருந்த 4 போ் சோ்ந்து தகாத வாா்த்தைகளால் பேசியும் கையால் தாக்கியும், ஏழுமலை குடும்பத்தினரை மிரட்டிச் சென்ாகத் தெரிகிறது.
இதில், பலத்த காயமடைந்த பாஸ்கரன், ஏழுமலை மற்றும் அவரது மனைவி அம்பிகா, ஜீவிதா(25) ஆகியோா் 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பாஸ்கரன், ஏழுமலை ஆகியோா் அளித்த புகாா்களின் பேரில் அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.