குடியரசுத் தலைவரின் கேள்விகள்: அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுமா?
நீடாமங்கலம்: நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுமா என பக்தா்களிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.
தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதா் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் வகையறா கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு என வடிவமைக்கப்பட்டதோ் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழாவின்போது தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
இப்படியான சூழலில் தேரோட்டம் நடைபெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகும். தோ் ஓடாமல் நிலை கொண்டுள்ளது. கோயில் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுவதில்லை என்பதும், தேரோட்டம் நடைபெறாததும் பக்தா்களிடையே வருத்தம். எனவே, திருவிழாவையும், தேரோட்டத்தையும் சிறப்பாக நடத்த இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.