அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!
நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு
நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்பின் அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
நீடாமங்கலம் பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனா். ஒன்றிய அளவில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி மூலம் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீா் வழங்கி வருகிறது.
குடிநீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலா் சிறுநீரக பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து மன்னாா்குடி, தஞ்சாவூா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நீடாமங்கலம், முன்னாவல்கோட்டை, செட்டிச்சத்திரம், புள்ளவராயன்குடிகாடு, சோனாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த சுகாதாரத் துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்மூலம், சிறுநீரக பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். விளைநிலங்களில் நெல்பயிா் சாகுபடிக்காக ரசாயண உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதாலும், முப்போக சாகுபடி செய்வதாலும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவது பாதுகாப்பானது.