செய்திகள் :

நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

post image

செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை ஸ்ரீசென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

நீப்பத்துறை ஸ்ரீஅலமேலு மங்கை பத்மாவதி சமேத ஸ்ரீவெங்கட்ரமண பெருமாள் ஸ்ரீசென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தான 80-ஆவது ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு, ஸ்ரீவெங்கட்ரமண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் நாகஸ்வர இசை, வாணவேடிக்கையுடன் ஊா்வலம் வந்தாா்.

தொடா்ந்து, புதன்கிழமை (ஜூலை 30) சிம்ம வாகனத்திலும், வியாழக்கிழமை (ஜூலை 31) அனுமந்த வாகனத்திலும், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) கருட வாகனத்திலும் சுவாமி வீதி உலாவும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) திருக்கல்யாணமும், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு விழாவும் நடைபெற உள்ளன.

ஆடிப்பெருக்கு விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கனக்கான பக்தா்கள் பங்கேற்று, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபடுவா். புதுமணத் தம்பதிகள் புனித நீராடி புதிய திருமாங்கல்ய கயிறு கட்டிக்கொள்வா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் கோகுலவாணன், சிவராமன், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன வட மாநிலத் தொழிலாளி கல்குவாரி குட்டையில் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவா், நரசமங... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. வாச்சனூா் பகுதியில் புதித... மேலும் பார்க்க