உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு ...
நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!
காஸா மீதான போரினால், இஸ்ரேலுக்கு எதிராகத் தடைகளைப் பெற முடியாததால், நெதர்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
நெதர்லாந்து நாடாளுமன்றத்தில், காஸா மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளின் மீதான தாக்குதல்களினால், இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருகள் மீதான தடை உள்பட அந்நாட்டுக்கு எதிரான புதிய நடவடிக்கைகளைக் கொண்டு வரப்போவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் அறிவித்தார்.
இந்தத் திட்டத்துக்கு அவரது கூட்டணி உறுப்பினர்களிடம் இருந்து போதுமான ஆதரவுக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவசியமான நடவடிக்கையை எடுக்க முடியவில்லை எனக் கூறி அவர் தனது வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கேஸ்பர் வெல்ட்காம்பின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, அவரது மைய-வலது ஒப்பந்தக் கட்சியின் மீதமுள்ள அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். இதனால், ஆட்சிக் கவிழும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த, ஜூன் மாதம் நெதர்லாந்தின் அரசை ஆட்சி செய்யும் 4 கட்சி கூட்டணிகளின் தலைவர்களில் ஒருவரான, இஸ்லாமியர் எதிர்ப்பாளர் கீர்ட் வில்டர்ஸ், குடியேற்றத்துக்கு எதிராகத் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனால், நெதர்லாந்தின் அரசு கவிழ்ந்த நிலையில், அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும் வரையில், மீதமுள்ள 3 கூட்டணிக் கட்சிகளும் தற்காலிக அரசை நிர்வாகம் செய்து வந்தன. மேலும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து அந்நாட்டுக்கு எதிராகத் தடைகள் விதிப்பது குறித்த விவாதமானது நெதர்லாந்தின் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இத்துடன், இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாததினால், விரக்தியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..