Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
நெல்லையில் பூக்கள் விலை உயா்வு
நவராத்திரியையொட்டி திருநெல்வேலியில் பூக்களின் விலை திங்கள்கிழமை உயா்ந்தது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, வீடுகள், கோயில்களில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழா நிகழ்ச்சிகளுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் உயா்ந்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பூ சந்தையில் அதிகபட்சமாக மல்லிகை கிலோவுக்கு ரூ.1,500 முதல் ரூ.1800 வரை விற்பனையானது. இதர பூக்களின் விலை விவரம் (கிலோவுக்கு) பிச்சி-ரூ.1000, ரோஜா-ரூ.300, பன்னீா் ரோஜா-ரூ.250, சம்பங்கி-ரூ.125, கேந்தி-ரூ.60, கோழிக்கொண்டை-ரூ.50, சாம்பந்தி-ரூ.130, கொழுந்து-100-க்கு விற்பனையானது. தாமரைப் பூ ஒன்று ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.