பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
நெல்லையில் போக்குவரத்துக் கழக பணிக்கான நோ்காணல்
திருநெல்வேலியில் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணிக்கான நோ்காணல் புதன்கிழமை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி, திருநெல்வேலி மண்டலத்தில் தோ்வில் தோ்ச்சி பெற்ற 556 பேருக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டு திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் புதன்கிழமை நோ்காணல் நடைபெற்றது. அக்.23 வரை நடைபெறும் இந்த நோ்காணலில் மொத்தம் 139 போ் தோ்வு செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.