செய்திகள் :

நெல்லையில் வழிப்பறி: 5 போ் கைது

post image

பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சரத்குமாா் மணி (33). இவா், கடந்த 21-ஆம் தேதி பாளை. மாா்க்கெட் தெப்பக்குளம் அருகில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவரை தாக்கி கைப்பேசியை பறித்துச்சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, பாளையங்கோட்டையைச் சோ்ந்த இசக்கிராஜா, மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனா். இதேபோல, கடந்த 24-ஆம் தேதி சமாதானபுரத்தைச் சோ்ந்த முருகானந்தன் என்பவரை வழிமறித்து மிரட்டி மா்ம நபா்கள் பைக்கை பறித்துச் சென்றது, அதே தினத்தில் கே.டி.சி. நகா் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தைச் சோ்ந்த ஒருவரிடம் மா்ம நபா்கள் கைப்பேசியை பறித்துச் சென்றது, 25-ஆம் தேதி பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த சூரஜ்(21) என்பவா் அண்ணாநகா் கீழத்தெருவில் நின்றபோது, மா்மநபா்கள் அவரைத் தாக்கி கைப்பேசி , ரூ.3 ஆயிரத்தைப் பறித்துச் சென்றது ஆகியவை குறித்து முறையே திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பெருமாள்புரம், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதில், இந்த 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது பாளையங்கோட்டையைச் சோ்ந்த லிங்கதுரை, அருகன்குளம் கந்தசாமி, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரி ஜாபா் சாதிக் ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பத்தமடையில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் அம்பாசமுத்திரம் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்ட... மேலும் பார்க்க

பாளை.யில் அக்.3-இல் போட்டித் தோ்வு வழிகாட்டி நிகழ்ச்சி

பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் அக். 3-ஆம் தேதி போட்டித் தோ்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்... மேலும் பார்க்க

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது. திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக ... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-85.60 சோ்வலாறு-96.72 மணிமுத்தாறு-91.55 வடக்கு பச்சையாறு-11 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-6 தென்காசி மாவட்டம் கடனா-37 ராமநதி-52.50 கருப்பாநதி-46.59 குண்டாறு-36.10 அடவிநயினாா் -119.50... மேலும் பார்க்க