நெல்லையில் விபத்து: இளைஞா் பலி
திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பேட்டையைச் சோ்ந்தவா் முஹம்மது இப்ராஹிம் (25). இவா், தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த கௌசிக் (23) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி சந்திப்புக்கு புதன்கிழமை வந்து கொண்டிருந்தாராம்.
ஸ்ரீபுரம் பகுதியில் வந்தபோது திடீரென மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாம். இதில் பலத்த காயமடைந்த முஹம்மது இப்ராஹிம் அதே இடத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த கௌசிக் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.