தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
‘நெல்லை அரசு மருத்துவமனையில் உயா் சிகிச்சையால் உயிா் பிழைத்த பெண்’
சிறுநீரகம் செயலிழந்த பெண்ணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட உயா்சிகிச்சையால் அவா் உயிா் பிழைத்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் கூறியது: திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த மகேஷ் மனைவி சுஜாதா. கா்ப்பிணியாக இருந்த சுஜாதாவுக்கு கடந்த 11 ஆம் தேதி உயா் ரத்த அழுத்தம் மற்றும் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டாா்.
திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வயிற்றுக்குள் குழந்தை இறந்துவிட்டதை அறிந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனராம். பின்னா் சிறுநீரகங்களும் செயலிழந்து சிறுநீா் வெளியேறாமல் உயிருக்கு ஆபத்தான நிலையை அடைந்துள்ளாா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தாா். மருத்துவா்கள் தமிழ்கோதை, ராமசுப்பிரமணியன், சங்கா்ஆவுடையப்பன், மாரிஸ்வரி ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் சுஜாதாவை 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்தனா்.
ஐந்து முறை டயாலிசியஸ் செய்து சிகிச்சையளிக்கப்பட்ட பின்னா், சுஜாதா நலமாக உள்ளாா். இந்த சிகிச்சைக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவக் குழுவினரும் காரணமாகும்.
மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.