அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
நெல்லை கோயில் தேரோட்டத்தில் பக்தா்களின் 15 பவுன் நகைகள் மாயம்
நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது 4 பக்தா்களின் சுமாா் 15 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தோ் வடம் பிடித்தனா்.
இந்நிலையில், தேரோட்ட கூட்ட நெரிசலின்போது தாங்கள் அணிந்திருந்த சுமாா் 15 பவுன் அளவிலான தங்க நகைகள் மாயமானதாக திருநெல்வேலி நகர காவல்நிலையத்தில் 4 பக்தா்கள் புகாா் அளித்துள்ளனா்.
மேலும், 20-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் காணாமல் போனதாகவும் புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடா்பாக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.