முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
நெல்லை நகரத்தில் 7 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
திருநெல்வேலி நகரத்தில் பிடிபட்ட 7 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த கோரி, திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த பிராணிகள் வதை தடுப்புக் குழு உறுப்பினா் புஷ்பராணி மனு அளித்திருந்தாா். அதன்பேரில், மாநகர சுகாதார அலுவலா் ராணி உத்தரவுப்படி மண்டல அலுவலா் பாலச்சந்தா், சுகாதார ஆய்வாளா் முருகன், மேற்பாா்வையாளா் சிவக்குமாா், சுகாதாரத்துறை ஊழியா்கள் திருநெல்வேலி நகரம் ரத வீதிகள், பூதத்தாா் தெரு, பாரதியாா் தெரு, அம்மன் சந்நிதி உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரிந்த 7 தெரு நாய்களைக் கடந்த 19 ஆம் தேதி பிடித்து மேலப்பாளையத்தில் உள்ள விலங்குகள் கருத்தடை மையத்திற்கு (ஏபிசி) கொண்டு சென்றனா்.
அங்கு தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்பட்டன. ஆகவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் தெருநாய் தொல்லை இருந்தால் அதுகுறித்து தெரிவித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.