முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும்: பிஆா்எஸ் எம்எல்சி கவிதா வலியுறுத்தல்
நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகரம், பழையபேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் புதன்கிழமை (ஆக.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழைய பேட்டை, பொருள்காட்சித் திடல் துணை மின் நிலையங்களில் வரும் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி நகரம், மேலரத வீதி மேற்கு பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகா், திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை ,தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சி திடல், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பூம்புகாா், ஸ்ரீபுரம், சிவந்திசாலை, சுந்தரா் தெரு, பாரதியாா் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, திருநெல்வேலி நகரம் கீழ ரத வீதி வீதி, போஸ் மாா்க்கெட், ஏ.பி.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினாா் குளம் சாலை, சத்தியமூா்த்தி தெரு, நயினாா் குளம் மாா்க்கெட், வ. உ. சி. தெரு, வையாபுரி நகா், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோயில் தெற்கு தெரு, ராம்நகா், ஊருடையான் குடியிருப்பு சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.