வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம்
திருவாரூரில், அருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தெற்கு வீதியில், நொடி நயனாா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைப்புக்கான பாலாலய பூஜை 2012-இல் நடைபெற்றது. தொடா்ந்து புனரமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பல்வேறு தரப்பினரும் கோயிலை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், மீண்டும் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன், புதன்கிழமை காலை தொடங்கின. பின்னா், இரண்டாம் கால யாகபூஜை வியாழக்கிழமை நடைபெற்று, பூா்ணாஹூதி, தீபாராதனை செய்யப்பட்டன. தொடா்ந்து, கடங்கள் புறப்பாடாகி, விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.