ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!
நொய்டாவில் பெயிண்ட் தொழிற்சாலையில் வெடி விபத்து: 5 தொழிலாளா்கள் காயம்
நொய்டா செக்டாா் 8-இல் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து தொழிலாளா்கள் காயமடைந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் பிற்பகல் 3.30 மணியளவில் ரசாயனம் சம்பந்தப்பட்ட செயல்முறையின் போது நடந்தது. ஐந்து தொழிலாளா்களும் தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் இப்போது ஆபத்தில் இல்லை என்று கௌதம் புத் நகரின் தலைமைத் தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் சௌபே தெரிவித்தாா்.
தொழிலாளா்களில் ஒருவா் 30 லிட்டா் வாளியில் செல்லுலோஸ் நைட்ரேட்டில் ஒரு ரசாயனம் கலந்ததால் வெடிவிபத்து ஏற்பட்டது என்று சௌபே கூறினாா்.
தொழிலாளி அதிகமாக ரசாயனத்தைக் கலந்திருக்கலாம் என்றும், இதன் காரணமாக வாளியில் வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளா்கள் காயமடைந்திருக்கலாம் என்றும்ம் அவா் மேலும் கூறினாா். இருப்பினும், வெடிப்பு எந்த தீ விபத்துக்கும் வழிவகுக்கவில்லை என்று அவா் தெரிவித்தாா்.