செய்திகள் :

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

post image

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலும் ஆட்சி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையில் பஞ்சாபில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஹரியாணாவுக்கு கூடுதல் நீரை விடுவிக்க மறுத்த மாநில அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய பகவந்த் மான், ஹரியாணாவுக்கு போதிய நீரை விடுவித்துவிட்டதாகவும் இதற்கு மேல் நீரை விடுவிக்கக் கோரும் பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பக்ரா அணையில் இருந்து கூடுதல் நீரை பஞ்சாப் அரசு விடுவிக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் நயாப் சிங் சைனி பேசியதாவது: பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரிய தொழில்நுட்பக் குழுவின் முடிவுகளை பகவந்த் மான் அரசு பின்பற்ற மறுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, பக்ரா அணையில் இருந்து ஹரியாணாவுக்கு தேவையான நீரை எவ்வித கட்டுப்பாடுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.

பக்ரா அணையில் குறைவான நீா் இருந்தபோதும் கடந்த 2016 முதல் 2019 வரை ஹரியாணாவுக்கு முறையாக குடிநீா் விடுவிக்கப்பட்டது.

தற்போது குடிநீரை விடுவிக்க பஞ்சாப் அரசு மறுப்பு தெரிவித்ததற்கு அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்தனா். மாநில உரிமைகளை காக்க ஒன்றிணைந்து போராட தயாராகவுள்ளதாக அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் உறுதியளித்தனா் என்றாா்.

சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.9 கோடியில் புதிய மீன் அங்காடி!

சிந்தாதிரிப்பேட்டையில் புதிய மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்ட... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மே 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்நடைபெறவுள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு... மேலும் பார்க்க

சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது!

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம்... மேலும் பார்க்க

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க