பங்குச் சந்தை: துடைத்தெறியப்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.7.46 லட்சம் கோடி!
புதுதில்லி: இன்றைய காலை நேர வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7.46 லட்சம் கோடி அளவுக்கு துடைத்தெறியப்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,414.33 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்களை உணர்வுகளை வெகுவாக உலுக்கியது.
உலகளாவிய வர்த்தகப் போர் அச்சங்களைத் தூண்டிய புதிய கட்டண அச்சுறுத்தல்கள் மற்றும் இடைவிடாத அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவைற்றால், இது முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவை வெகுவாக சரிய செய்தது.
காலை வர்த்தகத்தின் போது 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ பெஞ்ச்மார்க் குறியீடு 1,032.99 புள்ளிகள் சரிந்து 73,579.44 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,414.33 குறைந்து 73,198.10 புள்ளிகளாக வர்த்தகமான நிலையில், நிஃப்டி 420.35 புள்ளிகள் குறைந்து 22,124.70 புள்ளிகளாக நிலைபெற்றது.
பங்குச் சந்தைகளின் செங்குத்தான வீழ்ச்சியைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் காலை நேர வர்த்தகத்தில் சுமார் ரூ.7,46,647.62 கோடி குறைந்து ரூ.3,85,63,562.91 கோடியாக உள்ளது.
அதே வேளையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய கட்டண மிரட்டல்களைத் தொடர்ந்து அமெரிக்க கருவூல துறை உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தை ஆனது ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது என்றார் ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சித் தலைவரான விகாஸ் ஜெயின்.
பேங்க் நிஃப்டியைப் பொறுத்தவரை 48,500 க்கு கீழே இன்று வர்த்தகம் ஆனது. இந்த பலவீனமான உணர்வு மேலும் கீழ்நோக்கித் தொடர வாய்ப்புள்ளது. மூலதன சந்தை குறியீடு 9.28 சதவிகிதம் சரிந்த வேளையில் ஐடி குறியீடு 7.90 சதவிகிதம் சரிந்தது. விற்பனை அழுத்தம் தீவிரமடைந்ததால், இந்த வாரத்தில் மட்டும் பங்குச் சந்தை ஆனது சுமார் 22,500 / 74500 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி, ஹெச்சிஎல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் ஆக்சிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் முடிந்தது.
ஆசிய சந்தைகளில் இன்று சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து முடிந்தது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) கடும் சரிவுடன் முடிவடைந்தன.
டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பங்குச் சந்தைகள் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதாக தெரிவித்தார் ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டு ஆலோசகரான வி.கே. விஜயகுமார்.
டிரம்பின் இந்த தொடர்ச்சியான கட்டண அறிவிப்புகள் சந்தைகளை உருகுலைத்து வருகின்ற நிலையில், தற்போது சீனா மீது கூடுதலாக மேலும் 10 சதவிகித கட்டண அறிவிப்பு என்பது மற்ற நாடுகளை அச்சுறுத்தவும் அதன் பிறகு அமெரிக்காவிற்கு சாதகமான தீர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் பயன்படுத்துவார் என்று தெரியவருகிறது.
அதே வேளையில் சமீபத்திய கட்டணங்களுக்கு சீனா எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.556.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா 0.51 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 73.66 அமெரிக்க டாலராக உள்ளது.