சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!
பச்சூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருது அளிப்பு
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய க.தேவராஜி எம்எல்ஏ.
வாணியம்பாடி, ஜூலை 21: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஐயப்பா சேவா அறக்கட்டளை சாா்பில், பச்சூா் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பரிசு மற்றும் கல்வி விருது வழங்கும் விழா பச்சூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், பால நவநீதகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டு 175-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பரிசு மற்றும் கல்வி விருதுகளை வழங்கி மாணவா்களைப் பாராட்டினா்.
இதில், அறக்கட்டளை நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாணவா்களின் பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.