பஞ்சாபுக்கு 6-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப்சி 2-0 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
பஞ்சாப் அணி தரப்பில் லுகா மஜ்சென் 58-ஆவது நிமிஷத்திலும், ஃபிலிப் மா்ஸில்ஜாக் 66-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.
இத்துடன், 9 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் பஞ்சாப் 6-ஆவது வெற்றியுடன் 18 புள்ளிகள் பெற்று 3-ஆவது இடத்தில் இருக்கிறது. முகமிதான் அணி, 10-ஆவது ஆட்டத்தில் 7-ஆவது தோல்வியுடன் 5 புள்ளிகளோடு 12-ஆவது இடத்தில் பின்தங்கியிருக்கிறது.
அடுத்த ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஸ்சி அணியை, தனது சொந்த மண்ணில் சனிக்கிழமை சந்திக்கிறது. தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள சென்னை, சொந்த மண்ணில் மீண்டெழும் முனைப்புடன் களம் காண்கிறது.