டோலி கட்டி நோயாளியை தூக்கிச் சென்ற உறவினா்கள்: மலை கிராமங்களில் நீடிக்கும் அவலம...
பஞ்சாப்: கோதுமை கொள்முதல் 111 லட்சம் மெட்ரிக் டன்!
சண்டீகா்: தானிய சந்தைகளிலிருந்து 114 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில், இதுவரை 111 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர் லால் சந்த் இன்று தெரிவித்தார்.
அரசு நிறுவனங்களின், பயிர் கொள்முதல் இதுவரை 100 லட்சம் மெட்ரிக் டன் தாண்டி 103 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.
இதற்காக ரூ.22,815 கோடி அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று வரையிலும் 6,28,674 விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தானிய மண்டிகளுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொள்முதல் சுமூகமாக நடைபெற இதுவரை மாநிலத்தில் 2,885 கொள்முதல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 1,864 வழக்கமான கொள்முதல் மையங்களும் மற்றும் 1,021 தற்காலிகமானவை ஆகும்.
இதையும் படிக்க: 4-வது காலாண்டு வருவாய்க்குப் பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 5% சரிவு!