செய்திகள் :

பஞ்சாப்: மார்ச் மாதத்தில் மட்டும் போதைப்பொருள் வழக்குகளில் 4,706 பேர் கைது

post image

பஞ்சாப் மாநிலத்தில் கடந்தாண்டைவிட நிகழாண்டில் போதைப்பொருள் வழக்குகளில் கைது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் நிகழாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம்வரையில் மட்டும் 5,835 பேர் மீது போதைப்பொருள் தொடர்பான 4,192 வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. யுத் நஷேயன் விருத் நடவடிக்கைகளின்கீழ், சராசரியாக ஒரு நாளைக்கு 64 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வதாகக் கூறுகின்றனர்.

மார்ச் மாதத்தில் மட்டும் 4,706 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரூ. 73.9 லட்சமும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஒருநாள் சராசரி கைது எண்ணிக்கை, கடந்தாண்டில் 33 என்ற அளவிலேயே இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டான 2023-ல் 41 என்ற நிலையில் இருந்தது.

இந்த நிலையில், தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததால், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு போதைப்பொருள் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியதாக கூட்டணிக் கட்சிகளான பாஜகவும் ஷிரோமணி அகாலி தளமும் கூறுகின்றன.

கைது எண்ணிக்கை அதிகரித்தாலும், போதைக்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது சந்தேகமளிப்பதாக கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படிக்க:போலி மருத்துவரின் இதய அறுவைச் சிகிச்சையால் 7 பேர் பலி!

மும்பை - நியூயார்க்: எங்கு வாழ்வது சிறந்தது? விளக்கத்துடன்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ. 75 லட்சம் (87,687 டாலர்) சம்பளத்தைவிட, மும்பையில் ரூ. 25 லட்சம் (29,229 டாலர்) வாங்குவது சிறந்தது என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள்.பொதுவாக, இந்தியாவைவிட சில வெளிந... மேலும் பார்க்க

ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி!

தில்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலியானார். தில்லியின் தென்மேற்கில் உள்ள கபஷேரா பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் 11 மாவோயிஸ்டுகள் சரண்!

ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிஸ்டுகள் 11 பேர் நேற்று சரணடைந்தனர். அல்லூரி சீதராம ராஜு மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பர்தார் முன்னிலையில் மாவோயிஸ்டுகள் 11 பேர் நேற்று சரணடைந்தனர். இவர்கள் த... மேலும் பார்க்க

தேவாலயங்களைக் குறிவைக்கும் ஆர்எஸ்எஸ்: பினராயி விஜயன்

கத்தோலிக்க தேவாலயங்கள் நாட்டில் அதிக நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பதாக ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகை செய்தி வெளியிட்டதற்கு கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகையான ’ஆர்கனைஸ... மேலும் பார்க்க

ராம நவமி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

ராம நவமி திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.இது பற்றி பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில்,”அனைவருக்கும்... மேலும் பார்க்க

கல்லூரி தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கேள்விகள்: பேராசிரியருக்குத் தடை!

கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றிய சர்ச்சையான கேள்விகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பேராசிரியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க