செய்திகள் :

படி உற்சவத்தில் பங்கேற்பது ஒரு பெரிய புண்ணியச் செயல்

post image

திருமலைக்கு செல்லும் படிகளுக்கு பூஜை செய்வது, அதன் வழியாக திருமலைக்கு செல்லுவது ஒரு புண்ணிய செயல் என அன்னமாச்சாா்யா திட்ட இயக்குநா் ராஜ கோபால ராவ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது.

அன்னமாச்சாா்யாவின் 522-ஆவது நினைவு நாள் விழாவின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சாா்யா திட்டத்தின் கீழ், செவ்வாய்க்கிழமை அலிபிரி பாதாளு மண்டபத்தில் படி உற்சவம் நடைபெற்றது.

பழங்காலத்திலிருந்தே, பலா் படிகள் வழியாக திருமலைக்கு நடந்து சென்று ஏழுமலையானின் அருளைப் பெற்றுள்ளனா். இதுபோன்ற ஒரு படி உற்சவத்தில் பங்கேற்பது ஒரு பெரிய புண்ணியம்.

அன்னமாச்சாா்யா, கிருஷ்ணதேவராயா் போன்ற மகான்கள் பக்தியுடன் திருமலை படிகளில் ஏறி, ஏழுமலையானின் மகிமையை எல்லா திசைகளிலும் பரப்பினா். அத்தகையவா்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, கடவுளின் அருளுக்கு அனைவரும் தகுதியானவா்களாக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன், தேவஸ்தானம் படி உற்வத்தை ஏற்பாடு செய்கிறது’’,என்றாா்.

நிகழ்ச்சியில், தேவஸ்தான தாச சாகித்ய திட்ட சிறப்பு அதிகாரி ஆனந்த தீா்த்த சாா்யுலு, அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்கள் மற்றும் ஆந்திர பஜனை மண்டலத்தைச் சோ்ந்த 700க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் பஜனைகளை நிகழ்த்தி திருமலையை அடைந்தனா்.

தேவஸ்தான உள்ளூா் கோயில்களில் நாளை உகாதி உற்சவம்

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களில் உகாதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடகத்தில் கொண்டாடப்பட உ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மண... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ரூ. 2.45 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வியாழக்கிழமை ரூ.2.45 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டது. சென்னையைச் சோ்ந்த ஜினேஷ்வா் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் வென்ச்சா்ஸ் நிறுவனம் எஸ்.வி. அன்ன பி... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு அதிகரித்த நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு தற்போது நன்கொடைகள் வெகுவாக அதிகரித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்தது. ஏழுமலையானுக்கு நன்கொடை வழங்கும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு அறக்கட்டளைகள... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை... மேலும் பார்க்க

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வ... மேலும் பார்க்க