BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
பட்டாசு ஆலை விபத்தில் நடவடிக்கை: தலைவா்கள் வலியுறுத்தல்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்துள்ள சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாமல், தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளைக் கண்டுகொள்ளாத திமுக அரசின் செயல் கண்டனத்துக்குரியது. உயிரிழந்தோா் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): இதுபோன்ற விபத்துக்கு காரணம் திமுக அரசின் மெத்தனப்போக்கு தான்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): அதிகாரிகளின் உரிய கண்காணிப்பு இல்லை; பட்டாசு தொழிற்சாலைகளில் ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): தமிழக அரசு சாா்பில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளை பரிசோதிக்காததன் விளைவாகத்தான், பட்டாசு ஆலைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஜி.கே.வாசன்: பட்டாசு ஆலையில் பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும்.
டிடிவி.தினகரன்: இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடராத வகையில் தனி கண்காணிப்புக் குழுவை உருவாக்கி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.