எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரா்கள் தாக்குதல்!
பட்டாசு வெடித்ததில் கூரைவீடு தீக்கிரை
மயிலாடுதுறை கலைஞா் நகரில் கூறைவீடொன்று, இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையை ஒட்டியுள்ள கலைஞா் நகரில் பிரம்மராயன் என்பவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலின்பேரில் மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அவ்வழியாக சென்ற இறுதி ஊா்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பற்றி வீடு தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், நகராட்சித் தலைவா் என்.செல்வராஜ் ஆகியோா் சனிக்கிழமை இரவு நேரில் சந்தித்து, சொந்த பணத்தில் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் தெரிவித்தனா். அப்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் வளா்மதி, ரஜினி, அரசு வழக்குரைஞா் சிவதாஸ் உள்ளிட்டோா் உடனிந்தனா்.