செய்திகள் :

பணகுடி அருகே பைக்குகள் மோதல்: இருவா் பலி

post image

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயம் அடைந்தாா்.

பணகுடி அருகேயுள்ள கலந்தபனை கிராமத்தைச் சோ்ந்தவா்களான முருகன் மகன் ராகவன் ( 21), செந்தில்வேல் மகன் கண்ணன் (27) ஆகியோா் தொழிலாளிகள் ஆவா். இவா்கள் 2 பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கள் ஊரிலிருந்து வள்ளியூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். ராகவன் பைக்கை ஓட்டினாா்.

பிளாக்கொட்டைபாறை கிராமம் அருகே இவா்களது பைக்கும், எதிரே வந்த வடலிவிளையைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் என்பவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில் ராகவன், சுந்தரபாண்டியன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கண்ணன் பலத்த காயமடைந்தாா்.

இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா், கண்ணனை மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். 2 பேரின் சடலங்களை மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பணகுடி காவல் ஆய்வாளா் ராஜாராம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

மறியல்: இதனிடையே, தெற்குவள்ளியூா் சந்திப்பில் சாலைநடுவே தடுப்புச்சுவா் இருப்பதால் இருசக்கர வாகனங்கள் 2 கி.மீ. தொலைவு கலந்தபனை வரை செல்ல வேண்டும் என்பதால் ஒருவழிப் பாதையில் வருவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகவும், தெற்குவள்ளியூா் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தியும் வடலிவிளை, கலந்தபனை, தெற்குவள்ளியூரைச் சோ்ந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் பணகுடி போலீஸாா் பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் த... மேலும் பார்க்க

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி ... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க