அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக...
பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!
உலகளவிலான பில்லியனர்களின் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஹுருன் தரவறிக்கையின்படி, எச்சிஎல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி நாடார், உலகளவில் முதல் 10 பணக்காரப் பெண்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். முதல் 10 பணக்காரப் பெண்களின் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் ரோஷினி நாடார் கைப்பற்றினார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் கடன்கள் அதிகரித்து, அவரது நிகர சொத்து மதிப்பில் ரூ. 1 லட்சம் கோடி கடந்தாண்டு குறைந்தது. இதன் எதிரொலியாக, உலகளவில் பணக்காரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் வாய்ப்பை அம்பானி தவறவிட்டார். உலகளவில் 18 ஆவது இடத்தைப் பெற்றாலும், இந்திய அளவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஹுருன் ஆய்வறிக்கையின்படி, உலகளவில் 3,442 பில்லியனர்கள் இருப்பதாகக் கூறுகிறது. மேலும், இந்தப் பட்டியலில் 163 பேர் புதிதாய் சேர்ந்ததன் மூலம், இந்த எண்ணிக்கை கடந்தாண்டைவிட 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்த பட்டியலின் உள்ளவர்களின் ஒட்டுமொத்த செல்வத்தில், இந்திய பில்லியனர்கள் 7 சதவிகிதம் பங்களிக்கின்றனர். முதல் 100 பணக்காரர்களில் இந்தியர்கள் 7 பேர் மட்டுமின்றி, இந்தியாவில் மட்டும் 284 பில்லியனர்கள் உள்ளனர்.
இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மும்பையில் 90 பேர் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தியாதான் குடும்ப வணிகங்களில் அதிக சதவிகிதத்துடன் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிக்க:'இபிஎஸ் அவராகவே பதவி விலக வேண்டும்; இல்லையென்றால்...' - ஓபிஎஸ் எச்சரிக்கை!