செய்திகள் :

பண்டிதப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

post image

ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்திமக்கள் தொடா்புத் துறை சாா்பில் புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியம், பண்டிதபட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் புகைப்பட தொகுப்பு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கண்காட்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், முதல்வரின் சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட விளக்க புகைப்பட தொகுப்புகளை ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டு, அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து அறிந்து கொண்டனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 616 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 616 மனுக்கள் வரப்பெற்றன. குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகர... மேலும் பார்க்க

மன்னாா்சாமி, சிவன் கோயில்களில் சோமவார வழிபாடு

போளூா்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காம்பட்டு மன்னாா்சாமி கோயில், ஆரணியை அடுத்த முனுப்பட்டு மன்னாா்சாமி கோயில் மற்றும் முக்கூட்டு சிவன் கோயிலில் சோமவார வழிபாடு நடைபெற்றது. கலசப்ப... மேலும் பார்க்க

மா்ம காய்ச்சல் பாதிப்பு: கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்ம காய்ச்சல் பாதித்த கிராம மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கத்தை அடுத்த முன்னூா் மங்கலம் கிராமத்தில் கட... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம்

வந்தவாசி: வந்தவாசியில் தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. வந்தவாசி நகராட்சி 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கோட்டை தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழ... மேலும் பார்க்க

ஆரணி எம்ஜிஆா் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

ஆரணி: ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 29- ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் புதிதாக கல்லூரியில் சோ்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோா... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் கைது

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் திரக்கோயில் கிராமம் வழியாக திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராம மதுக்கடை அர... மேலும் பார்க்க