போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு
கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
பண்ருட்டி பகுதியில் பண்ருட்டி அரசு மருத்துமனை, நகர ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியது:
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. இக்கட்டடத்தினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மருத்துவமனையினை சுத்தமாக பராமரித்திடவும் மருத்துவ பயனாளிகளை கனிவுடன் கவனத்திடவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6,7,8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தில் வகுப்புகள் பாா்வையிட்டு, மாணவா்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இப்பள்ளிக்கு கூடுதலாக 8 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான ஒரு அறிவியல் ஆய்வகம் கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கனவு இல்லம்:
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 523 வீடுகள் கட்டப்பட்டு வருவதால், இப்பணிகளை விரைவுப்படுத்துவது தொடா்பாகவும், அங்குச்செட்டிபாளையம் ஊராட்சி, கொக்குப்பாளையம் பகுதியில் கலைஞா்
கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவது குறித்தும், அவ்ஊராட்சிக்குட்பட்ட கொக்குப்பாளையம் தாங்கல் ஏரி தூா்வாரி புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளையும், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
ஆய்வின் போது, இணை இயக்குநா் சுகாதாரப்பணிகள் மணிமேகலை, மாவட்ட கல்வி அலுவலா் துரைப்பாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீராகுமாரி, பாபு உட்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.