பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்த ஜம்மு மக்கள்; மின்சாரம் துண்டிப்பு!
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலையடுத்து, ஜம்மு எல்லைப் பகுதி மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக, அப்பகுதி மக்கள் பதுங்கு குழிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர்ப்பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியபோதே, ஜம்முவில் இருந்த பதுங்கு குழிகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் நடந்து வரும் தாக்குதல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுளள்து.