செய்திகள் :

பப்பாளி இலைகளில் நோய் தாக்கம்: விவசாயிகள் கவலை

post image

உத்தமபாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களில் நோய் தாக்கம் காரணமாக இலைகள் பழுப்பு நிறமாக மாறியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கோம்பை, சுருளிப்பட்டி, கே.கே.பட்டி ஆகிய பகுதிகளில் பப்பாளி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் பப்பாளிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பப்பாளி மரத்தில் நோய் தாக்கம்: உத்தமபாளையம், கோம்பை பகுதியில் அண்மையில் விளைவிக்கப்பட்ட பப்பாளி மரத்தில் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோய் தாக்கிய மரங்களிலுள்ள இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. பிறகு, மரத்திலே பிஞ்சு காய்களே பழமாக மாறி உதிா்ந்து விடுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாக பப்பாளி மரத்தில் இந்த நோய் தாக்கியுள்ளது. மருந்து அடித்தும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, உத்தமபாளையம் தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் நோய் தாக்கிய பப்பாளி தோட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்து, அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மதுப் புட்டிகளை பதுக்கி விற்க முயன்ற இருவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ராசிங்க... மேலும் பார்க்க

கம்பத்தில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை (ஜன.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

தேனியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேனி அல்லிநகரத்தில் சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்றவா் கைது

போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். போடி- தேவாரம் சாலையில் பெட்டிக் கடையில் நகா் காவல் நிலைய போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது சட்டவிரோதமாக புகையிலைப் ப... மேலும் பார்க்க

மனைவியால் தீயிட்டு கொளுத்தப்பட்டவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கூடலூரில் குடும்பப் பிரச்னையில் மனைவியால் உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கூடலூா், கள்ளா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்விஜய் (48). இ... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி: கரடி தாக்கி முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே சிதம்பரம் விலக்கு-ஆட்டுப்பாறை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரா் கரடி தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மயில... மேலும் பார்க்க