பயங்கரவாதத்தை நிறுத்தச் சொல்.. துருக்கிக்கு இந்தியா அழுத்தம்!
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கும் துருக்கி வலியுறுத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
#WATCH | Delhi: On Turkey, MEA spokesperson Randhir Jaiswal says, "We expect Turkey to strongly urge Pakistan to end its support to cross-border terrorism and take credible and verifiable actions against the terror ecosystem it has harboured for decades. Relations are built on… pic.twitter.com/yD1dtEtG77
— ANI (@ANI) May 22, 2025
அண்டை நாட்டின் மீது எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும், பல ஆண்டுகாலமாக பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை துருக்கி நிச்சயம் வலியுறுத்தும் என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கவலைகளை உணர்ந்துகொள்வதன் அடிப்படையில்தான் உறவுகள் உண்டாகின்றன என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
துருக்கியைச் சேர்ந்த நிறுவனம், நாட்டில் உள்ள 9 விமான நிலையங்களின் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியாவில் உள்ள துருக்கி தூதரகம் மூலம் இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்தியா - துருக்கி இடையேயான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.