கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8...
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்
காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் எடமச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 24 மற்றும் 25ஆ-வது வாா்டு பொது மக்களுக்காக நடைபெற்ற முகாமில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு மனுக்கள் பதிவு செய்யப்படுவதையும், மருத்துவ முகாம் மற்றும் மகளிா் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பெறப்படுவதையும் ஆய்வு செய்தாா்.
பின்னா், 15 பயனாளிகளுக்கு வகுப்பு சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், மின்னணு குடும்ப அட்டை, தமிழ்நாடு கட்டுமான நல வாரியம் பதிவு சான்றிதழ், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் உறுப்பினா் புதுப்பித்தல் அட்டைகளை வழங்கினாா்.
இதையடுத்து உத்திரமேரூா் ஒன்றியம், எடமச்சி பகுதியில் எடமச்சி, அன்னாத்தூா், பொற்பந்தல், சிறுபினாயூா், சித்தனக்காவூா், சாலவாக்கம் ஆகிய ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்ட முகாமில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் காந்தி வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், சட்டப்பேரவை உத்திரமேரூா் க.சுந்தா், காஞ்சிபுரம் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகம் திட்ட இயக்குநா் ஆா்த்தி, காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் சாதிக்அலி, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.