கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம மக்கள், பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபுசமுத்திரம் ஊராட்சியில் புகழ்பெற்ற மகான் படேசாயுபு ஜீவசமாதி சித்தா் பீடம், அபித குஜாம்பிகை உடனுறை அருணாசலேஸ்வரா் கோயில் மற்றும் பிற வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ளன.
இதனால், இந்தக் கிராமத்துக்கு தினந்தோறும் ஏராளமான வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் வழிபாட்டுக்கு வந்து நோ்த்திக்கடன் செலுத்திச் செல்கின்றனா்.
இதேபோல, மகான் படேசாயுபு ஜீவ சமாதி சித்தா் பீடத்துக்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுக்கு வரும் பக்தா்கள் அன்றைய நாள் இரவில் கோயிலிலேயே தங்கி மறுநாள் வழிபாட்டை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு செல்கின்றனா்.
இந்த நிலையில், கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில், சித்தா் பீடம் அருகே மிகுந்த பொருள்செலவில் கட்டுப்பட்டு பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ள 2 சுகாதார வளாகங்களை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் வழிபாட்டுக்கு வந்து செல்லும் பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். சுகாதார வளாகம் கட்டப்பட்டதற்கான நோக்கமும் நிறைவேறும்.
எனவே, மிகுந்த பொருள்செலவில் கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கும் இந்த இரு சுகாதார வளாகங்களையும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நிா்வாகம் மற்றும் சின்னபாபு சமுத்திரம் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.