பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
பரமத்தி வேலூரில் ஆனி திருமஞ்சன வழிபாடு
பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் புதன்கிழமை தேவாரம் திருவாசகம் ஓதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா், மாணிக்கவாசகா், சண்டிகேஸ்வரா் மற்றும் அப்பூதியடிகள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகேஸ்வர பூஜை மற்றும் அன்னம்பாலிப்பும் நடைபெற்றது.
விழாவில் பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த சிவனடியாா்கள் கலந்துகொண்டனா். அதேபோல நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் திருக்கோயிலில் காலை 6 மணிக்கு சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கைலாய வாத்திய இசை முழங்க மாலை 6 மணிக்கு நடராஜா் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.