செய்திகள் :

பரமத்தி வேலூரில் பூக்களின் விலை சரிவு

post image

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் பூக்களின் விலை சரிவடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 380-க்கும், சம்பங்கி ரூ. 120- க்கும், அரளி ரூ. 180- க்கும், ரோஜா ரூ. 150, பச்சை முல்லை ரூ. 500-க்கும், வெள்ளை முல்லை ரூ. 400-க்கும், செவ்வந்தி ரூ. 260-க்கும், கனகாம்பரம் ரூ. 500-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 200-க்கும், ஜாதிமல்லி ரூ. 600-க்கும், காக்கரட்டான் ரூ. 700- க்கும் ஏலம் போனது. விஷேச நிகழ்வுகள் எதுவும் இல்லாததால், பூக்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க