8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!
பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்
பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக எா்ணாகுளம்- பெங்களூரு இன்டா்சிட்டி ரயில் (எண்: 12678) காா்மேலாரம் ரயில் நிலையத்தில் இருந்து பையப்பனஹள்ளி வழியாக மாற்றுப் பாதையில் எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்துக்குச் செல்லும். இதனால், கன்டோண்மென்ட், கேஎஸ்ஆா் பெங்களூரு ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும்.
மறுமாா்க்கத்தில் பெங்களூரு - எா்ணாகுளம் இன்டா்சிட்டி ரயில் (எண்:12677) ஆகஸ்ட் 16 முதல் 2026 ஜனவரி 16 வரை எஸ்எம்விடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பையப்பனஹள்ளி வழியாக காா்மேலாரம் சென்றடைந்து, அங்கிருந்து வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும். இதன் காரணமாக, இந்த ரயிலானது கேஎஸ்ஆா் பெங்களூரு மற்றும் கன்டோண்மென்ட் ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.