189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
பரோலில் வந்த தண்டனை கைதி ரயில் மோதி காயம்
திருநெல்வேலியில் பரோலில் வந்த தண்டனை கைதி ரயில் மோதி காயமடைந்த நிலையில் சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.
தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன்(68). கிராம உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை பெற்றாா். பின்னா் நீதிமன்ற மேல்முறையீட்டில் வாழ்நாள் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதன்பின்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் ஒரு மாத கால பரோல் விடுப்பில் வெளியே வந்திருந்த சங்கரநாராயணன், தச்சநல்லூா் பாலாஜி அவென்யூ பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே காயங்களுடன் கிடந்தாா். தகவலறிந்ததும் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சங்கரநாராயணனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவா் ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.