இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்த...
பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 50 அடி பள்ளத்தில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள நேமம் பொன்னுமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் அனுப் (35). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பால் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு பகுதியிலிருந்து டேங்கா் லாரியில் பால் ஏற்றிவிட்டு கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றாா்.
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூா் மரப்பாலத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோர 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி இடிபாடுகளுக்குள் அனுப் சிக்கினாா்.
தகவலறிந்ததும் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளா் பச்சைமால் உள்பட போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று கிரேன் மூலம் பள்ளத்தில் விழுந்த லாரியை மீட்டனா். லாரிக்குள் அனுப் உயிரிழந்து சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, விசாரணை நடத்தினாா்.