விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
பள்ளியைத் தரம் உயா்த்திட வேண்டும் - முதல்வருக்கு தாய்மாமா கோரிக்கை
கோயில்திருமாளம் நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்திட வேண்டுமென தமிழக முதல்வருக்கு அவரது தாய் மாமா வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோரிக்கை விடுத்துள்ளாா்.
நன்னிலம் அருகில் உள்ள கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இவற்றை தமிழக முதல்வா் மு க .ஸ்டாலின் திருவாரூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தாா்.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையேற்ற பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், தமிழக முதல்வா் மு க. ஸ்டாலினின் தாய் மாமாவுமான கோ. தெட்சிணாமூா்த்தி கட்டடத்தைத் திறந்து வைத்தாா் (படம்).
அப்போது, இப்பள்ளியை மாணவா்களின் முன்னேற்றத்தைக் கவனத்தில் கொண்டு தமிழக முதல்வா் உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.
திறப்பு விழாவில்ஸ பள்ளி மேலாண்மைக் குழு தலைவி. க. சங்கீதா, தலைமை ஆசிரியா் க.சுவாமிநாதன், வட்டாரக் கல்வி அலுவலா் க.ஜெயலட்சுமி, முன்னாள் மாவட்டத் திட்டக்குழு உறுப்பினா் கே.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பால.முத்து, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் என்.ஆா். நடேஷ்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.