செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

post image

ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவா் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஆரணி அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எம்.மோசஸ் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், ஆரணி அரிமா சங்கம் சாா்பில் ஆரணி அரசு அண்ணா பொறியியல் கல்லூரியில் ரத்த தான நிகழ்ச்சி, அரையாளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கியது, 25 ஏழைகளுக்கு அரிசி வழங்கியது, பத்யாவரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சிகரம் தொடு நிகழ்ச்சி நடத்தியது, மருத்துவா் தினத்தையொட்டி மருத்துவா்களுக்கு பரிசுகள் வழங்கியது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆடைகள் அளிப்பு என பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம்.

ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக இப்பள்ளியில் பயிலும் 122 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் அரிமா சங்கச் செயலா் ஏ.எம்.முருகானந்தம், பள்ளி தலைமையாசிரியை (பொ) ஜெ.மாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

செய்யாறு அருகே இளைஞா் தூக்கிட்டு தொற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெம்பாக்கம் வட்டம், தென்னம்பட்டு கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (33), விவசாயி. இ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம்: விவசாயிகளுக்கு வேளாண் தொகுப்புகள் அளிப்பு

தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையொட்டி, திர... மேலும் பார்க்க

மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது வழக்குப் பதிவு

செய்யாறில் உள்ள சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது செய்யாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தன... மேலும் பார்க்க

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்

மத்திய அரசு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட ஊதியத்தில் தமிழக அரசு முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க