செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்
மத்திய அரசு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட ஊதியத்தில் தமிழக அரசு முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு நாள் கூலியாக
மத்திய அரசு ரூ.339 வழங்கும் நிலையில், தமிழக அரசு ரூ.70 மட்டும் வழங்கி பணி செய்த அளவுக்கு மட்டும்தான் கூலி என ஏமாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டினா். மேலும், 100 நாள் வேலையை குறைந்தபட்சம் 70 நாள் மட்டுமே வழங்குவதாகவும், நான்கு ஆண்டுகளில் நபருக்கு ரூ.60 ஆயிரம் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்து முழக்கமிட்டனா்.
திமுக ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாகவும், ஊரக வேலைத் திட்ட ஊதியத்தை மாநில அரசு முறையாக தொழிலாளா்களுக்கு வழங்குகிா என்று மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து, உணவில் மண்ணைப் போட்டு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். அக்ராபாளையம் செந்தில், மேட்டுக்குடிசை பெருமாள், மடவிளாகம் சிவா, புலவன்பாடி மணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.