முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
செய்யாறு அருகே இளைஞா் தூக்கிட்டு தொற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெம்பாக்கம் வட்டம், தென்னம்பட்டு கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (33), விவசாயி. இவா், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. வியாழக்கிழமை வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணபிரான் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், ராஜேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.