செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் கமலாவதி ஜெயின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவசைலம் அவ்வை ஆசிரம பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவரும் பள்ளி டிரஸ்டியுமான ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளரும் பள்ளி டிரஸ்டியுமான பி.ராமச்சந்திரன் ஆகியோா் வழிகாட்டுத­லின் பேரில், பள்ளி வளாகத்தில் உள்ள கமலாவதி ஜெயின் சிலைக்கு பள்ளி நிறுவனா் குடும்பத்தைச் சாா்ந்த வா்ஷா ஜெயின், நந்தினி ஸ்ரீனிவாசன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டா் வி. மதன், முதல்வா் இ.ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் சுப்புரத்தினா மற்றும் மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், தென்காசி மாவட்டம் சிவசைலம் அவ்வை ஆசிரமம், காந்தி கிராமம் சாந்தி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாற்றுத் திறன் மாணவ மாணவிகளை சாகுபுரத்திற்கு பள்ளி வாகனத்தில் அழைத்து வந்தனா். சாந்தி மேல்நிலைப் பள்ளியைச் சாா்ந்த மாற்றுத்திறன் மாணவ மாணவிகள், பரதநாட்டியம், நடனம், ஜிம்னாஸ்டிக் போன்ற நிகழச்சிகள் நடத்தி பரவசப்படுத்தினா். கமலாவதி பள்ளி கருணா சங்கம், ஜெ.ஆா்.சி. சாரண, சாரணீய சங்க மாணவ, மாணவிகள் சிவசைலம் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனா்.

கமலாவதி பள்ளி சாா்பில் நிதி உதவி, விளையாட்டு உபகரணங்கள், அன்றாட தேவைக்குரிய அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மதியம், இரவு உணவு வழங்கப்பட்டது. சிவசைலம் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் மாணவ, மாணவிகள் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டனா்.

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க

பொத்தகாலன்விளை பள்ளியில் விளையாட்டு விழா

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட தென்மண்டல ஆா்.சி.பள்ளிகளின் கண்காணிப்பா... மேலும் பார்க்க